சென்னை, அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கொடுக்கப் பட்டுள்ளது. டி.டி.வி. தினகரனால் கிளம்பிய புயல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒன்றி ணைக்க வைத்துவிட்டதாக, உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறுகையில், "சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. இருக்கக்கூடாது என்பதை வலி யுறுத்தி, தர்மயுத்தத்தில் ஈடுபட்டுவருகிறோம். சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்திருந்தனர். இரண்டு அணிகளும் ஒன்றிணைய நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு ஏற்படாதவாறு சிலர் தடுத்தனர். தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வருவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டோம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுச் செயலாளர் பதவியை வழங்க சம்மதம் தெரிவித்து, அது தொடர்பாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால்,அதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இன்று அல்லது நாளைக்குள் நல்ல செய்தி ஒன்று கட்சித் தலைமையிலிருந்து வெளிவரும்" என்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்