சீக்கிரமே மாநிலங்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா, 'என்னவானாலும் கட்சியின் தேசியத் தலை வர் பதவியிலிருந்து விலகமாட்டேன்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமித் ஷா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் பெரிய மாநிலமான உ.பி-யில், பா.ஜ.க அபார வெற்றியைப் பெற மூளையாகச் செயல்பட்டவர். பா.ஜ.க ஆட்சி அமைத்தப் பின்னர், கட்சியின் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் நெருங்கிய நண் பர்கள். தேசியத் தலைவராக பல மாநிலங்களில் கட்சி வெற்றிபெற, வியூகங்களை வகுத்தவர். தற்போது, குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதில், ஏற்கெனவே அங்கிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கூடுதலாக, அமித் ஷா-வும் மாநிலங்களவை எம்.பி-யாக மனுத் தாக்கல் செய்துள்ளார். குஜராத்தில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இருப்பதால் அமித் ஷா கண்டிப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. மேலும், அவர் எம்.பி-யாக பொறுப்பேற்றப் பிறகு பாதுகாப்புத்துறை அவருக்கு ஒதுக்கப்படலாம்என்றும் கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்