வடலூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள்மீது போலீஸ் தடியடி நடத்தியதால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள், தாங்கள் ஏற்கெனவே செய்துவந்த மாதம் 26 நாட்கள் வேலையை 19 நாட்களாக குறைத்துள்ளது என்.எல்.சி. நிர்வாகம். இதைக் கண்டித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 12-ம் தேதியிலிருந்து வேலை நிருத்தம் செய்து, பலகட்டப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இதற்கு, அனைத்துத் தொழிற்சங்கங்களும் தி.மு.க., பா.ம.க., த.வா.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவருகிறார்கள். இன்று 20-வது நாளை எட்டிய இந்தப் போராட்டம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் மனைவி, குழந்தைகள் என குடும்பத்தோடு வந்து, வடலூர் நான்குமுனை சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை களைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர். அதற்கு அவர்கள், கோரிக்கை நிறைவேறும் வரை இங்கிருந்து களைந்துசெல்ல மாட்டோம் என்றனர். இதனால், போலீஸாருக்கும் ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த போலிஸார், திடீரென்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலருக்கு மண்டை உடைந்தன. கை, கால்களில் அடிபட்டு சிதறி ஓடினார்கள். இதனால், அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்