ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமுக்கு தேசிய நினை வகம் அமைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த தேசிய நினைவகத்தை, கடந்த 27-ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நினைவகத்தில், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள், ஓவியங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், கலாம் கண்டு பிடிப்புகளின் மாதிரிகள், கலாமின் உருவச் சிலை ஆகியன உள்ளன. கலாம் நினைவிடத்தில் உள்ள அவரது சிலை அருகே பகவத் கீதையின் மாதிரி வைக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, கலாமின் பேரன் சலீம், நேற்று கலாம் சிலை அருகே பைபிள் மற்றும் குரான் புத் தகங் களை வைத்தார். இதற்கும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில், கலாமின் நினைவிடத்தைப் பார்வையிட நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ் வாறு வருபவர்கள், தங்களின் செல்போன்மூலம் படம் எடுத்தும் வீடியோ பதிவுசெய்தும் வந்தனர். இதனால், நினைவகத்துக்குள் கடும் இட நெருக்கடி ஏற் பட்டது. இதைத் தொடர்ந்து, நினைவிடத்துக்குள் வரும் பார்வையாளர்கள், இனி செல்போன், கேமரா ஆகியவற்றைப் பயன்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினர் தடை விதித்துள்ளனர். இதனால், கலாம் நினைவிடத்தைப் பதிவுசெய்ய விரும்பும் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந் துள்ளனர். கலாம் நினைவகத்தில் செய்தியாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தி சேகரிக்க வருபவர்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் அனுமதி பெற்ற பிறகுதான் அங்கு செல்ல வேண்டுமாம்!.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்