கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, மக்கள் கடும் அச்சமடைந்தது குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதுகுறித்தும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுத்துபூர்வமாகப் பதில் தந்திருக்கிறார். அதில், 'மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சேர்ந்து, எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட கசி வுகள் குறித்து 30 ஜூன் 2017-ம் தேதி அன்று ஆய்வுசெய்தார்கள். அந்த ஆய்வின்போது, 1,000 சதுர அடி பரப்பளவில், ஒரு அடி ஆழத்துக்கு எண்ணெய்க் கசிவினால் மண் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். பாதிப்புக்கு உள்ளான மண் முழுமையாக அகற்றப்பட்டு, அருகில் உள்ள ஓ.என்.ஜி.சி குத்தாலம் எரிவாயு மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பாதிப்புக்கு உள்ளான நிலத்திலிருந்து மண் முழுமையாக அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய மண்ணை விவசாயத்துக்கு ஏற்ற வகையில் நிரப்பவும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்