நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் மீது வன்முறைத் தூண்டியதாகக் கூறி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான் இது பாஜகவின் திட்டமிட்ட சதி என கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடை பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப் படுவதையும் அவர்கள் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் பற்றி கடந்த 5 ஆண்டுகளாக நான் பேசி வருகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் நெய்தல் படை அமைத்து மீனவர்களைப் பாதுகாப்போம் என்றும் கூறி வருகிறேன். மீனவர்கள் இந்த நெய்தல் படை யில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு துப்பாக்கியைக் கொடுப்போம் என்று பல கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் என் மீது பாயாத வழக்கு இப்போது பாய்ந்துள்ளது. நான் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருதால் பாஜக என்னைக் குறிவைத்து சதித் திட்டம் தீட்டி கைது செய்யது என்னை எப்படியாவது சிறையில் அடைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்