பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகை குறித்து முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளிக்காமல் முதல்வர் விறுவிறுவென்று காரில் சென்றுவிட்டார். சென்னை திருவொற்றியூரில் இன்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு மற்றும் அ.தி.மு.க இணைப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ’நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் அவசர சட் டம் கொண்டு வரப்படுமா ‘ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, ‘நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண் டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக அரசு இதுகுறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாணவர்களின் நலன்தான் தமிழக அரசுக்கு முக்கியம்’ என்றார். ஆனால், நீட் தேர்வு தொடர்பாக அவசர சட்டம் இயற்றப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். பிளவுப்பட்டுள்ள அ.தி.மு.க மீண்டும் இணையுமா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு முதல்வர் ‘இணைப்பு நடைபெறும்’ என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார். பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகை குறித்து முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல் முதல்வர் விறுவிறுவென்று காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்