ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததற்காக, சேலத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம். இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை சேலத்தில் விநி யோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர். ‘அவர் நக்சல் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறார்’ என்ற குற்றச் சாட் டையும் போலீஸார் சுமத்தினர்.
அவருக்குத் துணையாக வந்த அவரது தோழியின் தாயாரையும் நக்சல் பட்டியலில் போலீஸார் சேர்த்துவிட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சேலம் சிறையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் மாணவி வளர்மதி. இந்நிலையில், வளர்மதி மீது இன்று காலை குண்டாஸ் வழக்கு பாய்ந்துள்ளது. இதையடுத்து அவர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.