கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறைத்துறையில் பெண் டி.ஐ.ஜி-யாகப் பதவி வகித்தவர் ரூபா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண் டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் சசிகலா. அவருக்கு சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது என்றும் இதற் காக டி.ஜி.பி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் உயரதிகாரிகளுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தார் ரூபா. இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்ததாக, இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இந்த விசா ரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், பார்வையாளர்களைப் பார்க்க சசிகலாவுக்கு தனி அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மேலும் அதிர்வலையை ஏற்படுத்தினார் ரூபா.
இதையடுத்து, இன்று காலை அவர் திடீரென்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஏடிஜிபி சத்யநாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரூபா பணி யிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ரூபாவை மீண்டும் சிறைத் துறை டி.ஐ.ஜி-யாக நியமிக்க வேண்டும் என்று கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.