சசிகலாவுக்கு எதிராகப் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா அதிரடியாகப் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபி சத்யநாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. இந்தநிலையில், சிறைக்காவலர்கள் சசிகலா விடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு சலுகை வழங்கியுள்ளதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச் சாட்டை கூறினார். கர்நாடகா மட்டுமன்றி தமிழக அரசியலில் இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இந்த விசாரணை நடந்துக்கொண்டிக்கும் நிலையில், பார்வையாளர்களை பார்க்க சசிகலாவுக்கு தனி அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மேலும் அதிர்வலையை ஏற்படுத்தினார் டிஐஜி ரூபா. இப்படி அடுக்கடுக்கான புகார்கள் கூறி வந்த நிலையில் சிறைத்துறை டிஐஜி ரூபா இன்று அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 2 கோடி ரூபாய் பெற்று சசிகலாவுக்கு சலுகை தந்ததாக கூறப்பட்ட ஏடிஜிபி சத்யநாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏ.எஸ்.என்.மூர்த்தி கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்