img
img

20 கைதிகள் பெல்லாரிக்கு மாற்றம்: வேறு சிறைக்கு சசிகலா மாற்றம்?
ஞாயிறு 16 ஜூலை 2017 15:15:42

img

பெங்களூரு: சிறையில் சொகுசு வாழ்க்கைக்காக சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகள் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், சசிகலா வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. சசிகலாவுக்கு விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக, சிறைத்துறை டிஐஜி ரூபா அளித்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரகசி யமாக நடந்து வந்த இந்த சொகுசு வாழ்க்கை குறித்த தகவல் வெளியானதால் சசிகலா மிகவும் டென்சனில் உள்ளார். இனி வெளிப்படையாக எதையும் செய்ய வேண்டாம்; கவனமாக இருக்குமாறு தினகரன், விவேக் ஆகியோரிடம் சசிகலா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் சசி கலாவுக்கு சிறைக்குள் பிரத்யேக உணவுப்பொருட்கள், மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சசிகலாவுக்கு சொகுசு வாழ்க்கையும் தடைபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சிறையில் உள்ள கைதிகள் போதைப்பொருட்கள், செல்போன் பயன்படுத்துவதாகவும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் டிஐஜி ரூபா தெரிவித்தி ருந்தார். இதுகுறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில், கர்நாடக அரசு விசாரணை குழு அமைத்துள்ளது. இக்குழுவினர் விசாரணையை தொடங்குவதற்கு முன்பே, நேற்று காலை பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று மாலை டிஐஜி ரூபாவும் சிறைக்கு சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு வந்த சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், ரூபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆய்வின்போது பார்த்ததைதான் அறிக்கையாக தந்தேன் என ரூபா தெரிவித்தார். இந்நிலையில், சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் கைதிகளுக்கும், சிறை விதிமுறைகளை கடைபிடித்து வரும் கைதிகள் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. சிறையில் நடக்கும் விஷயங்களை சில கைதிகள்தான் புகார் அனுப்பியதாக சொகுசு வாழ்க்கை வாழும் கைதிகளுக்கு சந் தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் கைதிகள் இடையே மோதல் உருவாகும் நிலை இருந்தது. கைதிகள் சிலர் கோஷங்களையும் எழுப்பினர். இதனால், சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், சிறையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. சந்தேகத்துக்கு உரிய 20 கைதிகள் உடனடியாக பெல்லாரி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து, மாநில காவல்துறை தலைவர் ஆர்.கே.தத்தா சிறையில் இன்று விசாரணை செய்ய முடிவு செய்துள்ளார். டிஐஜி ரூபா அளித்த அறிக்கை தொடர்பாக, விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள வினய்குமார் தலைமையிலான குழு நாளை விசாரணை தொடங்குகிறது. சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தால், பரப்பன அக்ரஹார சிறையில் அசாதாரண சூழல் நில வுகிறது. எனவே, சசிகலா வேறு சிறைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சிறை விவகாரத்தை கர்நாடக மாநில எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச் னையாக கையில் எடுத்துள்ளன. சட்டம்-ஒழுங்கு குறித்து முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறைக்குள் நடக்கும் விஷயங்கள் வெளியே தெரியாமல் இருக்க பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img