ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் அடுத்தக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ,க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார். தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த தேர்தல் மேற்பார்வையாளர்கள் நேற்று மாலை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இந்த 15-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத்தில், சென்னை-600 009, புனித ஜார்ஜ் கோட்டை, சட்டமன்றப் பேரவைச் செய லக வளாகத்தில் அமைந்துள்ள 'குழுக் கூட்ட அறை' -யில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தத் தேர்தலை நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் (பொ) க. பூபதி, சட்டமன்றப் பேரவைச் செயலக இணைச் செயலாளர் பா.சுப்பிரமணியம் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்