img
img

முள்ளின் மீது நடந்து கொண்டிருக்கிறோம்” முதல்வர் நாராயணசாமி வேதனை !
ஞாயிறு 16 ஜூலை 2017 13:19:05

img

ஆட்சியை கவிழ்க்கப் போவதாக சிலர் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் ஒரு போதும் வாய்ப்பு இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்றப் பொதுத் தேர்தலில் 18 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சிதான் பாஜக” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித் திருக்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் 115-வது பிறந்தநாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் அதன் கட்சி அலுவகலத்தில் கொண் டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ”ஒரு முதல்வர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த உலகத்திற்கும் வழிகாட்டியவர்தான் காமராஜர். காங்கிரஸ் கட்சியில் எல்லா காலத்திலும் ஜனநாயகம் உண்டு. இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் சம்பாதிக்கும் நோக்கத்தோடுதான் வரு கிறார்கள். ஆனால் பதவிக்கு வந்த பிறகு கட்சியை உதறித் தள்ளிவிடுகிறார்கள். கட்சி இல்லாமல் பொது வாழ்வில் யாரும் ஒளிர முடியாது. காங்கிரஸ் கட்சி இல்லையென்று சொன்னால் நான் சாதாரண நாராயணசாமிதான். மக்கள் பணி செய்தால்தான் மக்கள் நம்மோடு இருப்பார்கள். கட்சி வேறு, நிர் வாகம் வேறு. நிர்வாகத்தில் விதிமுறைப்படிதான் செயல்பட முடியும். தற்போதைய நிலை அனைவருக்கும் தெரியும். நான் உட்பட அனைத்து அமைச் சர்களும் முள்ளின் மேல்தான் நடந்து வருகிறோம். மத்திய அரசிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களுக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது. ஆனால் அந்த சக்திகளையெல்லாம் முறியடித்து இரண்டு பெரிய திட்டங்களை நாம் புதுவைக்கு கொண்டு வந்துள்ளோம். 1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி, 535 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். முத்தியால்பேட்டை சோலை நகரில் இருந்து வாணரப்பேட்டை வரை கடற்கரையை சரி செய்து வாகனங்கள் செல்வதற்கும், மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். முதல் கட்டமாக இதற்கு 107 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறோம், மேலும் 100 கோடி ரூபாயைப் பெற இருக்கிறோம். கிராமப்புற மருத்துவ திட்டத்துக்காக இந்த ஆண்டு 80 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறோம். இது போன்ற பல திட்டங்களை மத்திய அரசிடம் இருந்துப் போராடி பெற்று வந்திருக்கிறோம். ஆட்சியை கவிழ்க்கப் போவதாக சிலர் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் ஒரு போதும் வாய்ப்பு இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சிதான் பாஜக. தற்போது மூன்று நியமன எம்எல்ஏக்கள் நிய மனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. அதிகாரத்தில் இருக்கும் சிலர் அதற்கு ஆதரவாக இருக்கின்றனர். சட்டமன்றத்தை அமைப்பதற்கு முன்பு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும். ஆனால் சபாநாயகர் சட்ட மன்றத்தை அமைத்துவிட்டால் உறுப்பினர்களுக்கு பதவிப்பிராமணம் செய்து வைக்க அவருக்குத்தான் முழு அதிகாரம் இருக்கின்றது. அதனால்தான் உரிய அதிகாரம் பெற்றவர்களிடமிருந்து தனக்குக் கடிதம் வரவில்லை என்று பதவிப்பிரமாணம் செல்லாது என்று சொல்லி ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பினார் சபாநாயகர். அதனால்தான் தற்போது அந்த மூன்று எம்.எல்.ஏக்களும் சட்டமன்றச் செயலரிடம் அன்றாடம் சண்டை போட்டு வருகின்றனர். முதல் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பரிந்துரையின்பேரில் தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மாநில அரசின் பிரச்சனையோ அல்லது மத்திய அரசின் திட்டங்களோ தன்னிச்சையாக அவரால் செயல்பட முடியாது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று எம்.எல்.ஏக்களை தான் பரிந்துரை செய்ய வில்லை என்று துணைநிலை ஆளுநர் கூறுகிறார். ஆனால் அவர்தான் பரிந்துரைத்தார் என்று மத்திய அமைச்சர் பேசிச் சென்றிருக்கிறார். தான் பரிந் துரைக்கவில்லை எனும்போது விதிமுறைகளுக்கு எதிராக அவர்களுக்கு ஏன் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் ? மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை ஓரம் கட்டிவிட்டு கொல்லைப்புறமாக எம்.எல்.ஏக்களை நியமித்து உரிமைகளை பறிக்கும் செயலை செய்திருக் கிறார்கள்” என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img