ஏ.ஆர். ரஹ்மான், பல்வேறு இந்திய மொழிகளில் இசையமைத்துள்ளார். குறிப்பாக, ஆங்கிலப்படங்களிலும் இசையமைத்துள்ளார். இதனால், தேசிய விருது முதல் ஆஸ்கர் வரை ரஹ்மானைத் தேடி வந்தன. இதனால், உலகம் முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. இதன் காரணமாக, ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கு நிச்சயமாக இருப்பார்கள் அவரின் ரசிகர்கள். இந்நிலையில், லண்டனில் உள்ள வெம்ப்லே பகுதியில், "நேற்று இன்று நாளை" என்ற பெயரில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சியாகும். ஆனால், இது தெரியாத பல வட இந்தியர்கள், இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வமுடன் சென்றுள்ளனர். நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடியதால், வட இந்தியர்கள் கடுப்பாகி பாதியிலேயே வெளியேறிவிட்டனர். மேலும், டிக்கெட் கட்டணத்தையும் திருப்பியளிக்க வேண்டும் என்று சிலர் கோரிவருகின்றனர். அதோடு விடாமல், "தமிழ்ப் பாட்டு மட்டும்தான் பாடுவீர்களா? அப்ப நாங்கள் எல்லாம் தக்காளி தொக்கா?" என்ற ரேஞ்சில் ஸ்டேட்டஸ்களைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சில தமிழர்கள், "நிகழ்ச்சி என்ன என்றே தெரியாமல் வந்துட்டுப் பொங்காதீங்க பாஸ். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்" என்று பதிலளித்துவருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்