பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நடிகையின் பெயரை பேட்டியின்போது பயன்படுத்தியதற்காக தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது கேரளாவில் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நடிகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், அந்த நடிகையின் பெயரை பயன்படுத்தினார். கமல், நடிகையின் பெயரைப் பயன்படுத்தியதற்கு கண்டனங்கள் எழுந்தன. ஆனால், நடிகையின் பெயரைப் பயன்படுத்தியது ஒன்றும் தவறில்லை என்று கமல் தெரி வித்திருந்தார். இதனிடையே, தேசிய மகளிர் ஆணையம், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், 'நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகின்றனர். நான் பெண்களை நேசிப்பவன். அவர்களின் உரி மைகளுக்காக சண்டையிடுபவன். காரணம் இல்லாமல் எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் நான் யாருக்கும் வளைந்து போக மாட்டேன். நீங்கள் குற்றவாளியை விட்டுவிட்டு வாதாடுபவர்களைத் தண்டிக்கிறீர்கள். இன்னும் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்பினால், நான் மன்னிப்பு கேட்க தயார். உங்கள் கடவுளைத் தவிர வேறு யாரும் சட்டத்தை விட உயர்ந்தவர்கள் இல்லை' என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்