டெல்லி அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் குற்ற பின்னணி உடைய 1,581 எம்பிக்கள் வாக்களிக்க உள்ளனர். இது அதிர்ச்சி தரும் தகவலாகும். ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தனித் தனி வேட்பாளரை நிறுத்தியுள்ளன. இதனால் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இந்த 2 நாள்களே உள்ள நிலையில் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு என்ற அமைப்பானது ஒரு ஆய்வை நடத்தி அதில் அதிர்ச்சிகர தகவலையும் அளித்துள்ளது. இந்த ஆய்வில் பெண் வாக்காளர்கள் எத்தனை பேர், குற்றபின்னணி கொண்டவர்கள், பணக் காரர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை கொடுத்துள்ளது. 1581 பேர் குற்ற பின்னணி ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ள 4,852 எம்பி, எம்எல்ஏக்களில் 1581 பேர், அதாவது 33 சதவீதத்தினர் குற்ற பின்னணி உடையவர்கள். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. 543 லோக்சபா எம்பிக்களில் 184 பேரும், 231 ராஜ்ய சபா எம்பிக்களில் 44 பேரும் குற்றபின்னணி கொண்டவர்கள். அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 4,078 எம்எல்ஏ-க்களில் 1353 பேர் மீதும் குற்றவழக்குகள் உள்ளன. 4852 எம்பிக்கள், எம்எல்ஏ-க்களின் சுய விவரங்களை ஆய்வு செய்ததில் 993 பேர் மீது கொடுங்குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் 543 லோக்சபா எம்பிக்களில் 117 பேரும், 231 ராஜ்ய சபா எம்பிக்களில் 16 பேரும், மொத்தமுள்ள 4,078 எம்எல்ஏ-க்களில் 860 பேரும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமுள்ள 10,91,472 வாக்குகளில் குற்ற பின்னணி உடையவர்கள் என அறிவிக்கப்பட்ட எம்பி-க்கள், எம்எல்ஏ-க்களின் மொத்த வாக்குகள் 3,67,393, அதாவது 34 சதவீதம் ஆகும். 3,460 எம்பிக்கள் கோடீஸ்வரர்கள். லோக்சபாவில் 445 எம்பி-க்களும், ராஜ்யசபாவில் உள்ள 194 எம்பிக்களும், 2721 எம்எல்ஏ-க்களும் குரோர்பதிகள் என்று முந்தைய தேர்தல்களில் அவர்கள் பதிவு செய்த வேட்புமனு தாக்கலின்போது தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 10,91,472 வாக்குகளில் 8,18, 703 எம்பி, எம்எல்ஏ-க்கள் கோடீஸ்வரர்களாவர். மொத்தமுள்ள 4,852 எம்பிக்கள், எம்எல்ஏ-க்களில் 451 பேர் மட்டுமே பெண்கள்.மொத்தமுள்ள வாக்குகளில் 10,91,472 அவர்களுக்கு 1,09,708 உள்ளது. மாநில சட்டசபைகளில் பெண்கள் வாக்குகளை அதிகம் பெற்றுள்ள மாநிலம், உத்தரப்பிரதேசம். அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்