புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட 8-ம் வகுப்பு 13 வயது மாணவி ஒருவர் கர்ப்பமாகத் திரும்பிய சம்பவம் அதிர்ச்சி அடையசெய்துள்ளது. தென்கிழக்கு டெல்லியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், இரண்டு மாதத்துக்கு முன் மே 6 ந்தேதி ஐஸ்கிரீம் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வீட்டுக்குத் திரும்பி வரவே இல்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். ஆனால், ஒரு தகவலும் கிடைக்க வில்லை. தொடர்ந்து போலீசார் அந்தச் சிறுமியின் தந்தையிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளனர். இதையடுத்து அவர் பணம் கொடுத்து தேடிக் கண்டு பிடிக்கக் கூறியுள்ளார்.இவ்வாறாக போலீசாருக்கு அவர் ரூ.45 ஆயிரம் வழங்கி உள்ளார். ஆனாலும் ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி, சிறுமியின் வீட்டின் அருகில் வசித்த ஒருவன் சரணடைந்தான். அவன் மூல மாக போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 3 வார கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் வீட்டருகே ஓட்டல்களில் வேலைபார்த்த 12 பேர் குடியிருந்துள்ளனர். அவர்கள்தான் சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. போலீசார் சம்பந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அது மட்டுமின்றி சிறுமியை தேடுவ தற்கு பணம் கேட்ட போலீசார் மீதும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்