கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் கிராம விளைநிலங்களில், ஓ.என்.ஜி.சி தனது எண்ணெய்க் குழாய்களைப் பதித்தது. இந்தக் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரண மாக விளைநிலங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், அந்தக் கிராம மக்களுடன் இணைந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட் டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் ஜெயராமன் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அப்பகுதியே கலவர பகுதியாக மாறியது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேரா.ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது, வழக்குப் பதிவு செய்து அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக் கப்பட்டுள்ள 10 பேரையும் விடுவிக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது, பேராசிரியர் ஜெயராமன் உள்பட கைது செய்யப் பட்ட 10 பேருக்கும், ஜூலை 28-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்