img
img

தமிழ்நாடு கடந்த 25 வருடங்களாக தனி நாடாக உள்ளது.
புதன் 12 ஜூலை 2017 17:31:41

img

கதிராமங்கலம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை, நேற்று திருச்சியில் வெளியிட்டார் 'நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆய்வு முடிவுகளை முன்வைத்துப் பேசிய சீமான், 'கதிராமங்கலத்தில் உள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்தினால் புற்றுநோய், தோல் வியாதிகள் வரும்' என எச்சரித்தார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான இரண்டாம் கட்டப் போராட்டம் 91-வது நாளாகத் தொடர்கிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரி வித்தார். முன்னதாக திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சீமான். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் ஆய்வு முடிவின் அறிக்கையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், “தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் அங்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாக, மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். 10 நாள்களுக்கு முன்பு, எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதால், அதிர்ச்சியடைந்த மக்கள், போராட்டம் நடத்தினர். அவர்களைப் போலீஸார் நடத்திய விதம் கடுமையான கண்டனத்துக்குரி யது. அங்கு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். இந்நிலையில், கதிராமங்கலத்தில் உள்ள நிலத்தடி நீரை எங்கள் சொந்த முயற்சியில் அரசு ஆய்வகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பினோம். அங்குள்ள குடிநீரைப் பயன்படுத்தினால் புற்றுநோய், தோல் வியாதிகள் வரும். இந்த ஆய்வறிக்கையை முறையாக நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று வழக்குத் தொடர உள்ளோம். தற்போது கதிராமங்கலம் தீவாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மோடி, உலக அளவில் தரகராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக அரசியல்வாதிகள் இந்திய அளவில் தரகர்களாக செயல் படுகின்றனர். அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுப்பதால், தமிழ்நாடு கடந்த 25 வருடங்களாக தனி நாடாக உள்ளது. தமிழகத்தை 2 மாநிலமாக மத்திய அரசு பிரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவ்வாறு பிரித்தால், தமிழர்களுக்குப் பாண்டிச்சேரியையும் சேர்த்து 3மாநிலமாகக் கிடைக்கும். திரைப்படத்துக்கு ஏற்கெனவே இருந்த அதிகக் கட்டணம் காரணமாகப் பலரும் திருட்டு சி.டி-யில் படம் பார்த்து வந்தனர். இதனால் தமிழ் சினிமா நலி வடைந்து வருகின்றது என்கிற குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது இன்னும் கூடுதலாக வரி விதித்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரியில் மாநில அரசு விதித்த 30 சதவிகித வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நான் எதிர்க்கிறேன். மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி, மொத்த வரிகளைக் குறைக்க முன்வரவேண்டும். ஜி.எஸ்.டி வரிவிதிப்பையும், அந்நிய முதலீட்டையும் காங்கிரஸ்தான் முதலில் கொண்டுவந்தது. எனவே காங்கிரஸும் பி.ஜே.பி-யும் ஒரே தராசின் இரு தட்டுகள்தான். தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சிதான் நடைபெறுகிறது. இதனால், இந்த அரசை மத்திய அரசு கலைக்காது. ஆனால், தற்போதைய நிலவரப்படி தேர்தல் நடைபெற்றால், தி.மு.க-தான் வெற்றி பெறும்'' என்றார் தடாலடியாக. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெறும் போராட் டத்தில் கலந்துகொண்ட சீமான், மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசினார். சீமானின் அனல் பறக்கும் பேச்சால், நெடுவாசல் போராட்டக்களம் தீவிர மடைந்துள்ளது!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img