அ.தி.மு.க எம்.பி-க்களில் ஒரு பகுதியினர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தரப்பு வேட்பாளர்களும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க எம்.பி-க்களில் ஒரு பகுதியினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் எம்.பி-க்கள் செயல்படுவது குறித்து முதல்வர் ஆலோசனை கூறியிருப்பார் என்று தெரிகிறது. ஏற்கெனவே, அ.தி.மு.க-வின் மூன்று அணிகளும் பா.ஜ.க-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எம்.பி-க்களில் ஒரு பகுதியினர் மட்டும் முதல்வரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்