நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தைக் காக்க, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் இறங் கியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, நெடுவாசல் மக்கள் இன்று 90-வது நாளாகப் போராடிவருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓ.என்.ஜி.சி-யைக் கண்டித்து, கதிராமங்கலம் மக்களும் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். செழிப்பான வேளாண்மை நடக்கும் இந்த இரு ஊர்களும், தங்கள் வாழ் வாதாரத்தைக் காக்க தீவிரமாகப் போராடிவருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகிவருகிறது. இந்நிலையில்,நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தைக் காக்க, திருச்செங்கோடு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அங்குள்ள தனியார் கல் லூரியைச் சேர்ந்த இவர்கள், தற்போது வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், கதிராமங்கலத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பிவருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்