img
img

ஆட்சி நல்லாயிருந்தா நாங்க ஏன் போராடனும்..?
ஞாயிறு 09 ஜூலை 2017 19:21:00

img

பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து போராட்டம் நடத்துவது பேஷனாகிவிட்டது' என்று போராட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தை கண்டித்து, இன்று நெடுவாசல் மக்கள் 89-வது நாள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து போராடுவது இப்போது பேஷன் ஆகி வருகிறது' என்றார். இந்த கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களையும், அவர்கள் போராட்டத்தை இழிவுபடுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த கருத்து சட்டசபை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது. இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் நெடுவாசல் மக்கள், இன்று 89-வது நாள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இன்றைய போராட்டத்தில் அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பெண்கள் மற்றும் குழந் தைகளை வைத்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவன் சிவதர்ஷன் (12) பேசுகையில், 'எடப்பாடி பழனிசாமி அய்யாவுக்கு வணக்கம். நாங்கள் பேஷனுக்காக போராடவில்லை. எங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடுகிறோம். இந்த மக்களின் உண வுக்காக போராடுகிறோம். நீங்கள் நன்றாக ஆட்சி செய்தால் நாங்கள் ஏன் போராட வருகிறோம்' என்று கேள்வியெழுப்புகிறார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மலர்மணி (50) கூறுகையில், 'பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய முதலமைச்சருக்கு நெடுவாசல் பெண்கள் சர்பாக கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். இன்று அவர் முதல்வராக இருப்பதற்கு காரணமாகிய ஜெயலலிதா, எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறார். அது எல்லாம் பேஷனுக்காக செய்த போராட்டமா..? அப்படியெனில் அவர் கூறியது போல, 'எங்களின் பேஷன் போராட்டம்' அத்தனை எளிதில் முடிந்து விடாது. சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றும் வரை இப்போராட்டம் தொடரும். அதுமட்டுமில்லாமல், எங்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், முதல் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இனியும் அவர்கள் வாக்குறுதியை நம்பப்போவதில்லை. எங்களுக்கு நிலையான முடிவு இதில் கிடைக்கும் வரை போராடுவோம்' என்கிறார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img