img
img

வறுமை காரணமாக மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி
ஞாயிறு 09 ஜூலை 2017 14:29:30

img

சோகார்கா, மத்திய பிரதேச மாநிலம், சேகோர் மாவட்டம், பசந்த்புர் பங்கிரி கிராமத்தை சேர்ந்தவர் சர்தர் கஹ்லா. விவசாயியான இவருக்கு ராதிகா(14) மற்றும் குந்தி(11) என்ற இரு மகள்கள் உள்ளனர். வறுமை காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டில் உள்ளனர். விவசாய பணிகளை துவங்க வேண்டிய நிலையில் தனது நிலத்தை உழும் பணிக்கு சர்தாரிடம் சொந்தமாக மாடுகள் இல்லை. வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு அவருக்கு போதுமான நிதி இல்லை. இதனால், அவர் தனது இரண்டு மகள்களை ஏரில் கட்டி நிலத்தை உழுதார். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிப் பரவின. ஒரு விவசாயிக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அவலமான இந்த நிலையைக் கருத்திற்கொண்டு மோடி அரசின்மீது பலவேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களை நிறைத்தன. நாடு நாடாக உலம் எங்கும் சசுற்றுவதும், வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போல இந்தியாவை புதிய இந்தியாவாக மாற்றுவது எனவும் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவரும் மோடி அரசு ஏழைகளை கவனிக்கத் தவறுகின்றது எனவும் விவசாயிகளைப் புறக்கணிக்கின்றது எனவும் கருத்துகள் பதிவாகின. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயி கூறுகையில், நிலத்தை உழுவதற்கு மாடுகளை கொண்டு வருவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. பணப் பிரச்சினை காரணமாக எனது இரண்டு மகள்களும் படிப்பை பாதியில் விட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷிஷ் சர்மா, ’சிறுவர்கள் இது போன்ற உழவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாகவும்’ கூறினர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img