சட்டப்பேரவையில் 2017 - 2018ம் ஆண்டுக்கான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில் ‘அரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி செய்யப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தின் போது போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதிய பேருந்து வசதிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு... *அரசின் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பொதுமக்களுக்கு இனி இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சியும் அளிக்கப்படும். *அரசின் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பயிற்சி மையங்களில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும். அதற்காக அவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும். *பேட்டரியில் இயங்கும் பேருந்துகள் சென்னையில் அறிமுகப்படுத்தப்படும். இதனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் புகை முற்றிலும் தவிர்க்கப்படும். *அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான பணிமனைகளில் ஏடிஎம் மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்படும். *அரசு போக்குவரத்துக் கழக குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். *அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் படிப்படியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். *அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் குளிர்சாதனப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். *அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தற்போது கழிப்பறைகளுடன் கூடிய இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்