மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த சில நாள்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வங்க மொழி கட்டாயம் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். இதையடுத்து அங்குள்ள கூர்க்கா இன மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதில் பல்வேறு வன்முறை சம்பவங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. மேலும் , கடந்த 4-ம் தேதி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதி யில், மதக் கலவரம் வெடித்தது. ஃபேஸ்புக்கில், குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றி இழிவாகப் பதிவிட்டதையடுத்து, அங்கு இரு தரப்பினரிடையே கலவரம் உருவானது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'சட்டம் ஒழுங்கு தான் ஒரு மாநிலத்துக்கு முதண்மையானது. மேற்கு வங்கத்தை மம்தாவால் சுமூகமாக ஆட்சி செய்ய முடியாவிட்டால், அங்கு குடி யரசு தலைவர் ஆட்சியை அமைக்க அவர் முன்வர வேண்டும். அப்போது தான் மேற்கு வங்கத்தில் நீடிக்கும் பதற்றம் முடிவுக்கு வரும். மத்திய அரசை விமர்சிப்பதால் ஒரு பயனும் இல்லை' என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே நேற்று, மேற்கு வங்க பிரச்னையில் மத்திய அரசு சரியாக ஒத்துழைக் கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் மம்தா பானர்ஜி.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்