நாகர்கோவில், அ.தி.மு.க. அம்மா அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தினகரனை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா. அவரால் நியமிக்கப்பட்டவர் துணை பொதுச்செயலாளர் தினகரன். இவர்கள்தான் கட்சியில் எந்த மாற்றத் தையும் கொண்டு வரும் அதிகாரம் படைத்தவர்கள். இவர்களை தவிர அமைச்சர் ஜெயக்குமாரோ, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வமோ கட்சியில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. கழக தொண்டர்களால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினகரனை தினமும் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் சந்தித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு, தினகரனை சந்தித்தார். இன்று காலை மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் சந்தித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் முடியும் முன்பு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தினகரனை சந்திப்பார்கள். திவாகரனுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை. தினகரன், உறவினர் என்ற முறையில் அவருடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்.இப்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நன்றாக நடக்கிறது. அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாகவே இருக்கிறார்கள். எங்களுக்குதான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை. ஆனால் தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயக்கம் காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னால் மக்கள் இருப்பதாக ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட் டனர். இப்போது ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவருடன் பொன்னையன், பி.எச். பாண்டியன், பாண்டியராஜன், செம்மலை ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூலிக்கு ஆள் பிடித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 5-ந்தேதிக்கு பிறகு தினகரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கஉள்ளார். அந்த சம்பவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இருக்கும். அரசியல் திருப்பு முனையை ஏற் படுத்தும்.இந்த கூட்டங்களில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு அனுப்புவோம். அதில் பங்கேற்பதும், புறக்கணிப்பதும் அவ ரது விருப்பம்.” இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்