செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

பரோலில் பேரறிவாளன் விடுவிக்கப்படுவாரா? சட்டப்பேரவையில் முதல்வர் பதில்
சனி 08 ஜூலை 2017 14:24:29

img

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், பரோலில் விடுவிக்கப்படுவாரா என்று, தி.மு.க. எம்எல்ஏ., அன்பழகனின் கேள்விக்கு, முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப் போது, தி.மு.க உறுப்பினர் ஜெ.அன்பழகன், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பதுகுறித்து தலைமை வழக்கறிஞரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பேரறிவாளனை பரோலில் விடுவிப்பதுகுறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்தார். இதைத் தெடர்ந்து, காவல்துறையில் 54 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுப் பேசுகையில், "சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறு வோரைத் தண்டிக்க ரூ.6.42 கோடியில் மின்ரசீது முறை அமல்படுத்தப்படும். 100 காவல் நிலைங்களில் ரூ.2.50 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ரூ.50 லட்சம் செலவில் கையடக்க ஜாமர் சாதனம் வாங்கப்படும். ரூ.35 லட்சம் செலவில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் 2 கருவிகள் வாங்கப்படும். ரூ.19 லட்சம் செலவில், அதிரடிப்படை வீரர்களுக்கான குண்டு துளைக்காத 2 பொதியுறைகள் வாங்கப்படும். தமிழ்நாடு காவல் துறையினருக்காக சைபர் அரங்கம் ரூ.3.71 கோடியில் உருவாக்கப்படும். 100 காவல் நிலையங்களில், ரூ.2.50 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பெட்ரோலியப் பொருள்களைப் பகுப்பாய்வு செய்வதற்கான கருவி, ரூ.50 லட்சத்தில் வாங்கப்படும். வீரதீரச் செயலுக்காக பதக்கம் பெறும் காவலர்களுக்கான பணப்படி ரூ.300-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப்படும். காவலர் பதக்கம் பெற்றவர்களுக்கான மாதாந்திர பதக்கப்படி, ரூ.200-லிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்படும். காவலர்களின் மெச்சத்தக்க பணிக்காக வழங்கப்படும் வெகுமதியுடன் கூடிய ரொக்கத்தொகை அதிகரிக்கப்படும். ரொக்கத்தொகை டிஎஸ்பி-க்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். சார்பு ஆய்வாளர் முதல், காவல் ஆய்வாளருக்கான தொகை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். 2-ம் நிலைக் காவலர் முதல், தலைமைக் காவலருக்கான தொகை ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்படும். தொழில்நுட்ப சிறப்புச்சேவையில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கான பரிசுத்தொகையும் உயர்த்தப்படுகிறது. இனம் 1ல் உள்ளோர் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமும், இனம் 2ல் உள்ளோர் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும். இனம் 3ல் உள்ளவர் களுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img