ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகி யுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பூஞ்ச் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று காலை நடந்தேறிய இந்தத் திடீர் தாக்குதலால், கணவன்-மனைவி இருவரும் பலியாகினர். அந்தத் தம்பதியினரின் இரண்டு குழந்தைகளும் காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தத் தாக்குதலில், இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, நேற்று காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் மீதும் அவர்கள் வாகனங்கள் மீதும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால், தற்போது எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்