லக்னோ, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்று, முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அரசு ஊழியர்கள் சிறப் பாக செயல்படவில்லை என்றால், அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில தலைமை செயலாளர் ராஜீவ் குமார் வெளியிட்ட அறிக்கையில், 'அரசு துறைகளில் பணியாற்றும் 50 வயதிற்கு மேல் உள்ள ஊழி யர்களுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு அவர்களின் பணி ஆய்வு செய்யப்படும். அப்போது சிறப்பாக செயல்படாத அரசு ஊழியர்கள் வலுக்கட்டாய மாக வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த துறை ஊழியர்களை கண்காணித்து சிறப்பாக செயல்படாதவர்கள் குறித்த பட்டியலை அரசுக்கு அனுப்ப வேண்டும். மேலும் அரசு ஊழியர்களை நீக்குவதால், அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசும் சமீபத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்