இலங்கை சென்று தமிழகம் திரும்பிய மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைதுசெய்துவருகின்றனர். பின்னர் மீனவர்கள் விடு விக்கப்படுவதும், படகுகளைச் சிறைபிடிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இலங்கைக் கடற்படையினரால் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க, படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். சமீபத்தில்கூட பத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப் பட் டனர். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இலங்கை சென்று வந்துள்ளார். இந்தப் பயணம்குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் பயணத்தின்போது, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகேவைச் சந்தித்து, தமிழக மீனவர் பிரச்னைகளை எடுத்துரைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைக் கனிவுடன் பரிசீலித்து, 'பிடிபட்ட படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்' என்ற நல்ல செய்தியைத் தமிழக மீனவ சகோதரர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன்மூலம், ஏற்கெனவே பிடிபட்ட சுமார் 120 படகுகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்