img
img

கேளிக்கை வரியை நீக்கச் சொல்வதில் நியாயமே இல்லை
வெள்ளி 07 ஜூலை 2017 14:23:59

img

ஜூலை முதல் தேதியிலிருந்து ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. ஜி.எஸ்.டி வரவால் திரையரங்குகள் மத்திய அரசுக்கு வரியைச் செலுத்த வேண்டும். ஏற்கெனவே திரையரங்குகள் கேளிக்கை வரியாக உள்ளாட்சி அமைப்புகளுக்காக மாநில அரசுக்கு 30 சதவிகித வரி செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஜி.எஸ்.டி கூடுலாகச் சேர்ந்தால் திரையரங்குகள் அதிகளவில் வரி செலுத்தவேண்டிய நிலை. இதை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை மூடி எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இதற்கு ஆதரவாக, கேளிக்கை வரியை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என ரஜினியும் திரைத் துறையினரும் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத் திருக்கிறார்கள். உண்மையில் இந்த வரி எங்கு செல்கிறது... எதற்காகப் பயன்படுகிறது? ரஜினி அரசியலுக்கு வரப்போகிறேன், மக்களுக்கு நல்லது செய்யப்போகிறேன் என்று சொல்கிறார். ஆனால், அவரே சரியான புரிதல் இல்லாமல் கேளிக்கை வரியை ரத்துசெய்ய வேண்டும் எனச் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் இந்த வரியை மாநில அரசு பெற்று, அதை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கிவருகிறது. மத்திய அரசு ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்தியபோது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்தப்படும் வரியை ஜி.எஸ்.டி-க்கு வெளியே கொண்டுவந்துவிட்டது. ஆகையால், கேளிக்கை வரி குறித்து மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும்தான் முடிவெடுக்க முடியும். அரசியல் சாசனத்தில் 101 சட்டத்திருத்தம் இதைத் தெளிவாகச் சொல்கிறது. தற்போது தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளே கிடையாது. அதற்கான தேர்தல் நடந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள்தான் கேளிக்கை வரிகுறித்து முடி வெடுப்பது ஜனநாயக நெறிமுறைகளின்படி சரியானது. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் தகுந்த நிதி ஆதாரம் இல்லாமல் இருக்கின்றன. கேளிக்கை வரி தான் முதன்மையான ஆதாரம். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாதபோது மாநில அரசின்மீது அழுத்தம் கொடுத்து வரியை நீக்கச் சொல்வது சரிதானா என்பதையும் திரைத் துறையினர் யோசிக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படம் வெளியிடப்படும்போது பாதுகாப்புக்குக் காவல் துறையின் உதவியை நாடுகிறார்கள். பொது இடங்களில் வாகனங்களை நிறுத் துதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற செயல்கள் எல்லாம் நடக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில் உள்ளாட்சி அமைப்புகள்தான் பொறுப்புடன் செயல்படுகின்றன. மேலும், தியேட்டருக்கு மின்சாரம், சாலை போக்குவரத்து, தேவையான நீர்... என எல்லா வசதிகளையும் பெறுகின்றன. ஆனால், இந்த வசதியை வழங்கும் அமைப்புக்கு வரி செலுத்த மாட்டோம் எனச் சொல்வது நியாயமா என்று யோசிக்க வேண்டும். கேளிக்கை வரி விலக்களிக்க வேண்டும் எனச் சொல்லும் இவர்கள், முப்பது ரூபாய் டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும். ஆனால், டிக்கெட் விலை யையும் குறைப்போம் என்று எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. ஆனால், வரியை மட்டும் ரத்துசெய்யச் சொல்வது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. திரைத் துறையினர் வரியைக் குறைக்கக்கூடச் சொல்லவில்லை. முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதாவது வரியைச் செலுத்த மாட்டோம், வரும் தொகையை முழுமையாக நாங்களே எடுத்துக்கொள்வோம்' என்கிறார்கள். இது சரியானதா என்பதையும் யோசிக்க வேண்டும். தியேட்டர்களில் அதிக அளவில் பார்க்கிங் கட்டணம், கேன்டீன் கட்டணம் என வசூலிக்கிறார்கள். இதுகுறித்து யாரும் வாய் திறப்பதில்லை. பல லட்சம் தொழிலாளர்கள் கஷ்டப்படுவதாகச் சொல்கிறார் ரஜினி. ஆனால், வெளிப்புறப் படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் எல்லாம் கேரவனில் சொகு சாக இருக்க, தொழிலாளர்கள் குறிப்பாகத் திரைத்துறையைச் சார்ந்த பெண்கள் பொதுக்கழிப்பிட வசதிகூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதுகுறித்து கவலைப்படுவதில்லை. தினசரி சம்பளத்துக்கே போராடும் திரைத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்காகக் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. இந்த வரியை ரத்து செய்தால் மொத்த லாபமும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும்தான் செல்லும். இதனால் எந்த வகையிலும் திரைப்படத் தொழிலாளர்கள் பயன்பெறப்போவதில்லை. ஆனால், அவர்களையும் கணக்கில் சேர்ப்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. உண்மையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கும் ஒரே வருவாய் வழியான கேளிக்கை வரியை நீக்கச் சொல்வதில் சற்றும் நியாயம் இல்லை" என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. திரைத்துறையினர் யோசிக்கவேண்டிய விஷயம்தான்! திரையரங்கு உரிமையாளர்கள் தங்களின் ஸ்டிரைக்கை முடித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும், 'ஜி.எஸ்.டி வரியையும் கேளிக்கை வரி யையும் டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து பெறப்படும்' என அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன். அரசு கொண்டுவரும் வரிகளைக் கடைசியில் மக்களிடமே வசூலிக்கும் கலையை, எல்லாரும் நன்றாகவே கற்றிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகவே புரிகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img