இலங்கை அரசு நேற்று இந்திய மீனவர்களுக்கு எதிராகக் கொண்டு வந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக முதல்வர் பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார். கடற்தொழில் சட்டத்தில் இலங்கை அரசு திருத்தம் கொண்டுவரும் மசோதாவை நேற்று தாக்கல் செய்தது. தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத் துதல், எல்லை தாண்டி மீன் பிடித்தல் போன்ற செயல்களுக்கு ரூபாய் 2 கோடி முதல் 20 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப் பட்டது. இந்தச் சட்ட மசோதாவால் தமிழக மீனவர்கள் அதிக அச்சம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக் காத நிலையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை மேலும் இறுக்கி உள்ளது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட புதிய சட் டத் திருத்தம் இந்திய மீனவர்களுக்கு எதிரானது. இந்தச் சட்டத் திருத்தத்தை ஏற்க முடியாது, இந்தத் திருத்தத்தால் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்