ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சார்ந்த லக்ஷ்மணன் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். 22 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தமுறை இந்தியாவின் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது. 45 நாடுகளைச் சார்ந்த 655 வீரர்கள் இந்தத் தடகள போட்டியில் பங்கேற்று உள்ளனர். இந்தியா சார்பில் 94 வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். முதல் நாளான நேற்று, இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தமிழகத்தைச் சார்ந்த லக்ஷ்மணன் தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் விகாஸ் கவுடாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நீனா வெள்ளிப் பதக்கமும் , நயனா ஜேம்ஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அனு ராணி வெண்கலம் வென்றார். முதல் நாளான நேற்று இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் என்று ஒட்டு மொத்தமாக ஏழு பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சீனா இரண்டு தங்கம் ஒரு வெள்ளி எனப் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்