புதுடில்லி, தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், உச்சநீதிமன்ற அறிவுறுத் தல்களையும் மீறி மிருகவதை நடைபெற்றுள்ளதால், ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய வேண்டுமென்று ’பீட்டா’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது. ’பீட்டா’அமைப்பின் வழக்கு, மத்திய அரசின் தடை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக் கோரி தமிழகமெங்கும் மாபெரும் மக்கள் புரட்சி நடைபெற்றது. அதன் மையமாக சென்னை மெரினா கடற்கரையில் ’தைப்புரட்சி’ என்னும் பெயரில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடந்தது. அதன் விளைவாக மத்திய அரசின் காட்சிப்படுத்தும் விலங்குகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வழிவகை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்களையும் மீறி மிருகவதை நடை பெற்றுள்ளதால், ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டுமென்று ’பீட்டா’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான புகைப்படம், காணொளி ஆதாரங்களை தாங்கள் சேகரித்து வைத்துள்ளதாக நீதின்றத்தில் தெரிவித்துள்ள ’பீட்டா’ அமைப்பானது, இந்த வழக்கினை விரைவில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.இதனால் மீண்டும் பரபரப்பாகி உள்ளது ஜல்லிக்கட்டு விவகாரம்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்