திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேர்த்து மொத்தமாகத் தமிழ் சினிமாவுக்கான வரி மட்டும் 58 சதவிகிதம் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், ''திரையரங்குகள் காலவரையற்ற முறையில் மூடப்படும்” என்று அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 4 நாள்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை அபிராமி ராமநாதன் தலைமையிலான குழுவினர் சந்தித் தனர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அபிராமி ராமநாதன், "திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது. கேளிக்கை வரி தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு சார்பில் ஆறு பேரும், திரையரங்கு உரிமை யாளர்கள் சங்கம் சார்பில் எட்டு பேரும் இடம்பெறுவர். போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இயலாமையின் காரணமா கவே திரையரங்குகள் மூடப்பட்டன. எங்களது சூழ்நிலையை அரசு புரிந்துகொண்டது. போராட்டம் கைவிடப்பட்டதால், நாளை முதல் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும். 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியுடன் டிக்கெட் வசூலிக்கப்படும்" என்றார். ஜி.எஸ்.டி வரியுடன் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதால், 120 ரூபாய் டிக்கெட்டின் விலை 153 ரூபாய் வரை உயருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்