திரையரங்குகள் மீதான இரட்டை வரிவிதிப்புக்கு எதிராக, தமிழகம் முழுவதும் கடந்த திங்கள் முதல் தொடர்ந்து நான்கு நாள்களாகப் படங்களைத் திரையிடாமல் புறக்கணித்து வருகின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். இதனால், பல கோடி ரூபாய் இழப்பை தியேட்டர் உரிமையாளர்களும் சினிமா தயாரிப்பாளர்களும் சந்தித்து வருகின்றனர். மாநில அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்' என சினிமா உலகத்தினர் கோரிக்கை வைக்கும் வேளையில், பாடலாசிரியர் மதன் கார்க்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. கேளிக்கை வரி திரும்பப் பெறப்பட்டு சினிமா துறை மீண்டும் சரியான பாதையில் செல்லும் வரை எனது சம்பளத்திலிருந்து 15 சதவீதத்தைக் குறைத்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்தார். இதைத் திரையுலகினர் பலரும் வரவேற்றுள்ளனர். ''ஒரு பிரச்னை வரும்போதுதான் அதற்கான தீர்வைத் தேடுவோம். பிரச்னைக்கான தீர்வை வெளியே தேடாமல், எனக்குள்ளேயே தேடினேன். எனவே தான், இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டேன். என்னால் இதுதான் செய்ய முடியும். தயாரிப்பாளர்களுக்குப் பிரச்னைக்கு மேல் பிரச்னை வந்துகொண்டு இருக்கிறது. பைரசி என்பது ஒரு பெரிய பிரச்னையாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போதெல்லாம், தியேட்டரில் வசூல் பாதிக்கப்படும். இதை எல்லாம் எதிர்கொண்டுதான் தயாரிப்பாளர்கள் ஒரு படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்த சினிமாவை அடிப்படையாக வைத்துதான் என்னுடைய வாழ்க்கை இருக்கிறது. எனவேதான், இந்தப் பிரச்னைக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். என்னால் வெளியில் போய் போராட முடியாது. எதிராகக் குரல் கொடுக்கவும் முடியாது. அதனால்தான் சம்பளத்தில் 15 சதவீதத்தைக் குறைத்துக்கொள்கிறேன் என்றேன். இது எந்த அளவுக்குப் பயனுடையதாக இருக் கும் என்று தெரியவில்லை. இதனால் சிறு தாக்கம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சிதான். என்னுடைய முயற்சிக்கு சில தயாரிப்பாளர்கள் தங்கள் வாழ்த்தைத் தெரி வித்தார்கள்" என்றார். " இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. ஆனால், என்னைப்போல நடிகர்களும் செய்ய முன்வந்தால், அது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான உதவியாக இருக்கும். ஆனால், இதுபற்றி சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட முடிவு" என்றார் உறுதியாக.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்