தென்னிந்திய காவல்துறைகளிலேயே தமிழகக் காவல்துறைக்குத்தான் மிகக் குறைந்த சம்பளம்' என சமீபத்திய ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், சமீபத்தில் தென்னிந்திய காவல்துறையினர்குறித்து ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அதில், காவல் துறையினரின் ஊதியம்குறித்தும் ஓர் ஆய்வுசெய்தனர். அதன் முடிவுகள்தான் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக தமிழகக் காவல்துறைக்கு. 'தென்னிந்திய காவல்துறைகளிலேயே தமிழகப் போலீஸாருக்குத்தான் குறைந்த சம்பளம்' என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முதல் இடத்தில் கேரளா மாநிலமும், அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களும் உள்ளன. தமிழ்நாடுதான் கடைசி இடத்தில் உள்ளது. தமிழகக் காவல்துறையினரின் குடும்பங்கள் ஊதிய உயர்வு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட் டிருக்கும் இந்த நேரத்தில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி தமிழகக் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்