சென்னை, இந்தியாவில் ஜிஎஸ்டி வரி உட்பட கேளிக்கை வரி முறையும் நடைமுறைக்கு வந்ததால் மிகப் பெரும் இழப்பினை சந்தித்திருக்கிறது திரையுலகம்.வரி ஏய்ப்பை தாங்கமுடியாத சினிமாத்துறை செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனதுடன் பல திரையரங்குகள் இயங்கமுடியாமல் மூடப்பட்டிருக்கின்றன. திரைப்படத்திற்கு விநியோகமாகும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட விழுக்காட்டுப் பணத்தை அரசுக்கு செலுத்திவிடும் நிலை யில் மீதி குறைந்த விழுக்காட்டைக் கொண்டு நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், தொழில்நுட்பம், வெளியீடு, விற்பனை, விநியோகம், விளம்பரம் என எல்லா செலவுகளையும் ஈடுகட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சினிமாத்துறை பெரும் சோகத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதற்காக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் மெல்ல விமர்சித்திருக்கிறார். அதாவது எங்கள் மீதான இந்த வரிவிதிப்பை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் எனும் கருத்தை அவரது டுவிட்டரில் பதிவு செய்தார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் ரஜினிமீதான பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் உருவாக்கிவிட்டது. மக்களுக்கு பிரச்சினை என்றால் வாயை மூடிக்கொண்டிருக்கும் அரசியல் ஆசை கொண்ட ரஜினி தனது சொந்த வருமானமும், வியாபாரமும் பாதிக் கப்படுகிறது என்றவுடன் விரைந்து குரல்கொடுப்பது அவரின் சுயநலமும், சுயரூபத்தின் வெளிப்பாடும்தான் என விமர்சனங்கள் கொந்தளித்தன. ரூபா நோட்டுகள் முடக்கத்தின்போது நாங்கள் வங்கி வாசலில் தவம்கிடந்தபோது மோடியை ஆதரித்து முதன்முதலில் கருத்துச் சொன்ன ரஜினி, இது வரை தமிழகமெங்கும் இத்தனை துயரங்களில் வாயைத் துறக்காத ரஜினி இப்போது மட்டும் கருத்திடுவது அவரின் உண்மைத்தன்மையை புலப் படுத்துகின்றது எனவும் செய்திகள் வெளியாகின. ரஜினியின் பதிவை அப்படியே பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து அதை வைரலாக்கிவிட்டவர் நடிகர் கமல்ஹாசன்தான். சமூக வலைத்தளங்களில் வலம்வந்த லட்சக்கணக்கான விமர்சனங்களுக்கு நடுவே மிகவும் வரவேற்பைப் பெற்ற வாசகம் இதுதான். ரஜினி சார், உங்களுக்கு வந்தா ரத்தம் மக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்