புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் பரிந்துரை இன்றி பாஜகவைச் சேர்ந்த மூன்று பேரை எம்.எல்.ஏ-க்களாக நியமித்து உத்தரவிட்டது மத்திய உள் துறை அமைச்சகம். புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் சென்றது காங்கிரஸ் தரப்பு. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், மத்திய உள்துறை செயலர், இணைச் செயலர், புதுச்சேரியின் தலைமைச் செயலர் மற்றும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மூன்று எம்.எல்.ஏ-க்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது உயர் நீதிமன்றம். இதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ''கொல்லைப்புறமாக பா.ஜ.க-வைச் சார்ந்த 3 பேருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரகசியமாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ள செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க-வும் துணைநிலை ஆளுநரும் இணைந்து இந்த ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தியுள்ளனர். இதற்காக நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கிறேன். முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் அரசின்மீது துணைநிலை ஆளுநர் பழியைச் சுமத்தினார். தனது அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்கிறார் துணைநிலை ஆளுநர். சென்டாக்கில் ஊழல் என்று கூறிய துணைநிலை ஆளுநரின் கருத்து பொய்யாகியுள்ளது. நீதிமன்றமே அதை நிரூபித்தும் உள்ளதால் துணைநிலை ஆளுநர் புதுச்சேரியை விட்டு வெளியேறுவாரா. பா.ஜ.க தலைவரைப்போல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார். இதற்கான பதிலை ட்விட்டர், ஃபேஸ்புக் மூலம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்றே தெரிவிக்க வேண்டும். புதுச்சேரி மாநில மக்களின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு எதிராகவும் பா.ஜ.க-வின் ஏஜென்ட்டாகவும் செயல்படுகிறார் துணை நிலை ஆளுநர். அரசின் மீது நம்பிக்கை இல்லாதவர் புதுச்சேரியை விட்டு வெளியேறட்டும். தேர்தலில் டெபாசிட் வாங்காமல் வெறும் 1,200 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றவர்தான் தற்போது நியமன எம்.எல்.ஏ” என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்