அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதால் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தி யம் இல்லை. அ.தி.மு.க உடைந்தது உடைந்ததுதான் என்று சசிகலா புஷ்பா எம்.பி காட்டமாகத் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், சசிகலா புஷ்பா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பரபரப்புக் கருத்தைத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். அதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா மீது, பண மோசடி, பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் அடுத்தடுத்து பாய்ந்தன. இந்த நிலையில், சசிகலா புஷ்பா வீட்டில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி, பானுமதி ஆகிய சகோதரிகள் வேலை செய்து வந்தனர். அவர்களை சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகர் மற்றும் மகன் ஆகியோர் அடித்து பாலி யல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் அளித்தனர். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சசிகலா புஷ்பா தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூன் 13-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இது தொடர்பான வழக்கு நாங்குநேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அந்த நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரான சசிகலா புஷ்பா, ஜாமீன் உத் தரவு ஆவணங்களைத் தாக்கல் செய்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வெளியே வந்த சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சமான்ய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அவர் களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த வரிவிதிப்பு உள்ளது. இந்த வரி விதிப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கும். தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு நிகராக யாராலும் ஆட்சி செய்ய முடியாது. அவர், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மன தில் கொண்டு சிறப்பான வகையில் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியுடன் தற்போதைய ஆட்சியை ஒப்பிட்டு பேசவே கூடாது. அவரைப் போன்ற தலை மைப் பண்பு கட்சியில் யாருக்குமே இருக்கவில்லை. அதனால்தான் அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டு விட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் இணைவதற்காக பேச்சுவாரத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இரு அணியினருக்கும் இடையே யார் பெரியவர் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் தனது அணி சார் பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவைக் கலைத்து விட்டார். இது தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டு இருக்கும் கருத்து வேறுபாடு கார ணமாக மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. அ.தி.மு.க உடைந்தது உடைந்ததுதான்” என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்