இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல்குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள நஜிம் ஜைதியின் பதவிக்காலம் வருகின்ற 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலை மைத் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின்புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல்குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குஜராத் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். மேலும், குஜராத் மாநிலத்தின் பல்வேறு துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு வயது 65. நாளை மறு நாள் அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்க உள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்