img
img

அதிமுகவில் அதிரடியாக அரசியலில் நுழைகிறார் இளவரசியின் மகள்.
செவ்வாய் 04 ஜூலை 2017 18:25:45

img

சென்னை சசிகலா குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வரத்துடிக்கும் ஜெயானந்த் இற்கு அடுத்தபடியாக அரசியலுக்கு தான் வருவதற்கான முன்னோட்டமாக இள வரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா பல அரசியல் விமர்சனங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருவருவது தமிழக அரசி யலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாராங்களால் கேட்போரை ஈர்க்கத்தக்கவர். மேலும் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்து அரசியல் களம் கற்றவர் இவர். சசிகலா குடும்பத்தினரை கட்சி,ஆட்சியில் நீக்க வேண்டும் என ஒரு தரப்பு முயலும் அதேவேளை அங்கிருந்தே இளைய தலைமுறை ஒன்று அரசியலில் தெலையெடுத்திருக்கும் இந்த நிலை சசிகலா, இளவரசி களின் நீண்டநாள் திட்டமா, கனவா என்ற விமர்சனங்கள் வெகுவாக கிளம்பி யிருக்கின்றன. இப்போதுதான் உண்மையிலேயே கட்சியில் சசிகலா குடும்பத்தினர் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர் என்ற சந்தேகம் வலுப்பெற்ற அதே வேளை சமூக சேவகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சசிகலாவின் அண்ணன் மகள் அதாவது இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, அரசி யலுக்கு வர முயற்சிக்கும் ஏற்பாடு மிக நீண்ட நாள் திட்டமாகவும், மிகப்பெரும் அரசியல் இலக்காகவும் கருத வாய்ப்புண்டு என்கின்றனர் தமிழக ஆர் வலர்கள். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு நடை, உடை பாவனைகளில் மாற்றம் கொண்டு வந்த கிருஷ்ணபிரியா தான் போயஸ் கார்டனின் அடுத்த இளவரசி என்றும் தகவல்களை வேண்டுமென்றே கசியவிட்டது இளவரசி தரப்பு. அரசியல் பயிலும் அடுத்த வாரிசு மிடாஸ் மது உற்பத்தி நிறுவனம் முழுவதும் கிருஷ்ணபிரியாவின் கணவர் கார்த்திகேயன் கட்டுப்பாட்டில் உள்ள நிலை யில் ஜெயலலிதா கஜானா அனைத்தும் கிருஷ்ணப்ரியா கட்டுப்பாட்டில் இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. ஏற்கெனவே அரசியல் குறித்து அறம் பயின்று வருகிறார் கிருஷ்ணபிரியா என்றும் சொல்லப்பட்டது. போயஸ் கார்டனிலேயே வளர்ந்த கிருஷ்ணபிரியா ஜெயலலிதாவின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதால் அவரைப் போலவே தோற்றத்திலும் மாறினார் இவர். அண்மையில் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினத்தன்று நிகழ்ச்சி ஒன்றில் இவர் பேசிய விழிப்புணர்வு பேச்சு பலராலும் கவனிக்கப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் கிருஷ்ணபிரியாவின் அரசியல் பிரவேசம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெயானந்த் அண்மைக்காலமாக தான் அரசியலுக்கு வரப் போவதாக சொல்லி வருகிறார். இந்நிலையில் அவருக்கு எதிர் அம்பு விடும் வகையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தொடர்ந்து 4 நாட்களாக அர சியல் குறித்த பதிவுகளை தனது விருப்பங்களை வெளியிட்டு வருகிறார். ஜூன்30ஆம் தேதி வெளியிட்டுள்ள பதிவில் அரசியல் என்பது ஒருவரின் சக்தியை பொறுத்ததல்ல என பதிவிட்டிருந்தார். "போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம் புரியும் அப்போது மெய்யான கோலம்" என்ற கவிஞர் மருதகாசியின் கவிதையையும் தனக்கு சாதகமாக வெளியிட்டுள்ளார் கிருஷ்ணப்பிரியா. காரணம் சமூக வலைத்தளங்களால் இளைய வர்க்கத்தை ஈர்க்கும் சாதுரியம் அறிந்தவர் இவர். அளவிற்கு அதிகமான அமைதி நிறைந்திருக்கும் இடத்தில், அளவிற்கு அதிகமான வீரமும் நிறைந்திருக்கும் என்பதை சிலசமயம் வெளிக்காட்டித்தான் ஆக வேண்டியிருக்கிறது என்று ஒரு பதிவை எச்சரிக்கையாக விட்டுள்ளார். வம்புக்கு போகவேண்டியதில்லைதான். ஆனால் வரும் வம்பையும் விட வேண்டியதில்லை, என்று கடைசியாக நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கிருஷ்ணபிரியா கூறியிருக்கிறார். தொடர்ந்து தான் அரசியலுக்கு வர நேரிடும் என்பதை எச்சரிக்கும் தொணியில் கிருஷ்ணபிரியா வெளியிட்டு வருகிறார். இது ஜெயானந்த் திவாகரனுக்கு எதிராக விடப்படும் எச்சரிக்கையா என்று சந்தேகமும் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஜெயானந்த்திற்கும் இளவரசியின் மகன் விவேக்கிற்கும் வெளிப் படையான முட்டல் மோதல் ஏற்பட்ட நிலையில் இளவரசியின் மூத்த வாரிசும் அரசியல் களம் காணும் தனது ஆசையை வெளிக்காட்டியுள்ளார், தாங் குமா அதிமுக என்பது கேள்விக்குறிதான். மேலும் இன்றைய அதிமுகவின் பரபரப்புகளுக்கிடையில் பல குழுக்களாகப் பிரிந்து தமக்கு சாதகமற்று செயல்படும் அணிகளை நம்புவதை விட அழகிய ஒரு இளந்தலைமுறையை தமக்காக சசிகலா தரப்பு தேர்ந்தெடுத்திருக்குமா என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img