ஜெய்ப்பூர், இந்தியா முழுவதும் ஒரே மாதிரி வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நன்மை அதிகமா, அவஸ்தை அதிகமா என்று மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தானில் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஜி.எஸ்.டி. என்று பெயரிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பீவா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த 30ஆம்தேதி ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்துக்காக அனுமதிக் கப்பட் டிருந்தார். பிற்பகலில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தும் நீண்ட நேரமாக குழந்தை பிறப்பது தள்ளிப் போய் கொண்டே இருந்தது. அன்றிரவு 12 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த விழாவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்படுவதை மருத்துவமனை டாக்டர்களும், ஊழி யர்களும் தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 12.02 மணிக்கு அந்த பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டது. அந்த பெண் அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்தார். ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபோது தனக்கு குழந்தை பிறந்ததால் அந்த தாய் மகிழ்ச்சி அடைந்தார். தனது குழந்தைக்கு அவர் ஜி.எஸ்.டி. என்று பெயர் சூட்டினார். பிறகு அவர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதையடுத்து அனைவரும் ஜி.எஸ்.டி.யை வாழ்த்தி சென்றனர். இதற்கிடையே 30ஆம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிறந்த குழந்தைக்கு ஜி.எஸ்.டி. என்று பெயரிடப்பட்டுள்ள தகவல் ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரராஜே சிந்தி யாவுக்கு தெரியவந்தது. உடனடியாக டுவிட்டரில் அவர் அந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தார். நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்க என்று அவர் தனது வாழ்த்தில் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்