சென்னை அண்மையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் அணை நிரம்பும் நிலையில் காவிரியில் தண்ணீரைத் திறந்து விட்டுள்ளனர். இந்த நிலைமையைக் கவனித்த நடிகர் விஷால், காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தனது வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறந்து விட்டதற்கு நன்றி என்று கர்நாடகா அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். எத்தனை காலப் போராட்டம் தண்ணீருக்கு. தமிழகத்துக்கு உரிமையான தண்ணீரை பெறுவதில் எத்தனை கடுமையான அரசியல் சித்து விளையாட்டு கள் என பல்வேறான துயரமான சம்பவங்கள் நிறைந்திருக்க, விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் தராத கர்நாடகா விஷால் சொன்னதும் திறந்து விட்டது எனும் கருத்து கேட்போரை நகைச்சுவைப் படுத்துவதாக அமைவதுடன் பெரும் வைரலாகி சமூக வலைத் தளங்களை துளைத்தெடுத்தது. மழை நீரின் அதிகரிப்பால் அணைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என பாதுகாப்பு கருதி வெள்ள நீரை திறந்து விடுகின்ற நிலையைக் கூட தனது அறிவால் உணர்ந்துகொள்ளாத நடிகர் விஷால் அதனை அரசியலாகப் பார்த்து, கருத்து வௌியிட்டு விளம்பரம் தேடும் நடவடிக்கை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 205 டி எம் சி தண்ணீர் உச்சநீதி மன்ற தீர்ப்புப்படி கர்நாடகா வழங்கவேண்டும் என்ற சட்டம்கூட அவமதிக்கப்பட்ட நிலையில் விஷாலின் வார்த்தை மதிக்கப்பட்டதா, விஷால் எங்கே இருக்கிறார் ஏன் இவருக்கு இந்த சின்ன விவாகாரத்தைக் கூட புரிந்துகொள்ளமுடியாமல் சிறுபிள்ளைத்தனமாக சிந்திக்கிறார், காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஜூன் முதல் பருவ மழைக்காலம் வந்தால் யார் கேட்டாலும், கேட்காமல் இருந்தாலும் உபரி நீர் திறந்து விடப்படுவது தெரியாதவரா விஷால் என்ற கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களைப் பதம் பார்த்தன. எது எப்படியோ, சினிமாவை நம்பிய தமிழக அரசியலும், அரசியல் நெருக்கடிகளின் நடுவே அரசியல் செய்யும் சினிமா நடிகர்களும் இருக்கும்வரை அறிவுசார்ந்த ஒரு அரசியல் கட்டமைப்பு தமிழகத்தில் மிகத் தொலைவில்தான் இருக்கின்றது என்கிறது ஒரு சமூகவலைத்தள விமர்சனம்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்