மீத்தேன், கெய்ல், ஹைட்ரோ கார்பன் எனப் பல்வேறு அழிவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு, இன்பத் தமிழகத்தைத் துன்பத் தமிழகமாக மாற்ற முயல்கிறது என வைகோ குற்றம் சாட்டினார். ம.தி.மு.க பிரமுகரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க நெல்லைக்கு வருகை தந்த ம.தி,மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ''நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது போலவே நமது நாட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பும் நள்ளிரவிலேயே நடந்துள்ளது. இதற்காக 18 முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூடியபோதிலும், அள்ளித் தெளித்த அவசர கோலத் திலேயே நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஆரம்பத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என பிரதமரே தெரிவித்து இருக்கிறார். அதனால், இந்த வரி விதிப்பால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மாநில அரசின் வசம் இருந்த வரி இனங்கள், வரி மாற்றங்கள் மூலமாக மத்திய அரசு ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் தீப்பெட்டி, பட்டாசு ஆலைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. அதனால், இந்த வரிவிதிப்பை எதிர்த்து அந்த நிறுவனங்கள் கடந்த 4 நாள்களாக மூடப் பட்டுள்ளன. திரையரங்கங்கள் மீதும் கடுமையான வரிவிதிப்பு உள்ளது. 58 சதவிகித கேளிக்கை வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு வரிவிதிப்பு ஒருபுறம் இருந்தபோதிலும், மாநில அரசும் கேளிக்கை வரியை உயர்த்தி அந்தத் தொழிலின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால், இன்றைய அ.தி.மு.க அரசு அதை ஆதரிக்கிறது. எடப்பட்டி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து சுதந்திரமாக செயல்பட வேண்டும். மத்திய அரசு, தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய இந்த அரசை மதித்து நடத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்து அழிவுத் திட்டங்களையும் மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்து செயல்படுத்துகிறது. அதன் மூலமாக இன்பத் தமிழகத்தைத் துன்பத் தமிழகமாக மாற்ற மத்திய அரசு சதி செய்கிறது. தமிழகத்தில் பல லட்சம் விவசாயிகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விவசாயிக ளின் கடனைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில் மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விவசாயிகளின் நல னைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கதிராமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் கடந்த 2011-ல் ஓ.என்.ஜி.சி எண்ணெய் எடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந் தத் திட்டத்தை ம.தி.மு.க சார்பாக அப்போதே நாங்கள் எதிர்த்தோம். இதற்காக பசுமைத் தீர்ப்பாயத்தில்கூட வழக்குத் தொடர்ந்தோம். இந்தத் திட்டங்கள் கவும் ஆபத்தானவை. கதிராமங்கலத்தில் போராடும் மக்களை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. அவர்களை அச்சுறுத்தும் வேலையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை எல்லாம் வரும் 9-ம் தேதிக்குள் மாநில அரசு அப்புறப்படுத்த வேண்டும். அத்துடன், அங்கு கைது செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கு மாநில அரசுக்கு 9-ம் தேதி வரை அவகாசம் கொடுக் கிறேன். அதற்குள் போலீஸாரை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தவர்களை விடுவிக்காவிட்டால், 10-ம் தேதி போராட்டக் களத்தில் நானே பங்கேற் பேன்” என்றார் காட்டமாக.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்