img
img

பெண்கள் ஜீன்ஸ், செல்போன் பயன்படுத்தப் கூடாது... ராஜஸ்தான் கிராம பஞ்சாயத்து அதிரடி!
திங்கள் 03 ஜூலை 2017 16:21:53

img

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் என்ற கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் ஆடவரை ஈர்க்கும் ஆடைகளை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கலாச்சார சீரழிவிற்கு வழிவகுப்பதால் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு தடை விதித்து ராஜஸ்தான் மாநிலம் பல்தியாபுரா பஞ்சாயத்து கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பேசும் போது, ஆண்களை ஈர்க்கும் வகையில் பெண்கள் ஆடைகளை அணியக் கூடாது, ஜீன்ஸ், செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானம் போட்டுள்ளோம். மேற்கத்திய கலாச்சார முறையை பின்பற்றுவதன் மூலம் கலாச்சார சீரழிவு ஏற்படுவதோடு, பாலியல் வன்கொடுமை குற்றங்களும் அதிகரிக்கின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டே இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக விளக்கமும் தருகிறார். தற்போதைய காலகட்டத்தில் கிராமத்து பெண்கள் கூட மேற்கத்திய ஆடைகளையே அணிகின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெண்களின் பெற்றோர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். அதோடு அவர்களின் செயல்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம், என்கிறார் பஞ்சாயத்து தலைவர் கனசில் ஹரியோம் சிங் பார்மர். பெண்கள் ஆடை சுதந்திரத்தை கையில் எடுப்பதாலேயே பலாத்காரம், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். கலாச்சார சீரழிவு என்று வந்தால் அதை ஒரு போதும் கிராமத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறுகிறார் பஞ்சாயத்து தலைவர். கஷ்வாஷ் இனத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வசிக்கும் பல்தியாபுரா கிராமத்தைப் போலவே கன்சில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து பஞ் சாயத்துகளிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுப்பழகத்தை ஒழிப்பதற்காகவும் இந்த கிராம சபையில் தீர் மானம் போடப்பட்டுள்ளது. கிராமத்தில் இருக்கும் எவரேனும் மது அருந்தினால் ரூ. 1,100 அபராதம், மது அருந்துவோர் பற்றி புகார் அளிப்பவருக்கு ரூ.500 சன்மானம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளிகும் புகையிலைப் பொருட்கள் விற்பனைத் தடை செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு கேடு விளைவிக்கும் புகையிலை, மதுபானம் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால் பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் கலாச்சார சீரழிவு ஏற்படும் என்பது தான் அபத்தமாக இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டோல்புர் மாவட்ட துணை கலெக்டர் மது, புகையிலைக்கு தடை விதிப்பது வரவேற்க வேண்டிய விஷயம். பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிப்பது சட்டவிரோதமானது, இது வரை இந்த தீர்மானம் குறித்து எந்தப் புகாரும் வரவில்லை, விரைவில் உரிய புகார் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img