சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குக் கடந்த பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து மூவரும் பெங்களூர் சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட நான்கு வருட சிறைத் தண்டனையை மறுசீராய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் சசிகலா தரப்பினர். வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மறு சீராய்வு மனு ஜூலை 6-ம் தேதி விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசார ணையின்போது சசிகலாவுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்று சசிகலா பேரவையினர் தொடர் பூஜைகளும் யாகங்களும் செய்து வருகின்றார்களாம்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்