ரஜினி மீது அவதூறு பரப்பும் சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி யுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அரசியல் தொடர்பாக ரஜினியை மீண்டும் சந்தித்துப் பேச உள்ளேன். அவர் அரசியலில் நிச்சயம் மாற்றங்களை நிகழ்த்துவார். ரஜினி மீது அவதூறு பரப்பும் சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு தொடரப் படும்'' என்றார். முன்னதாக, சுப்பிரமணியன் சுவாமி, ''ரஜினிகாந்த் படிப்பறிவு அற்றவர் என்றும் அரசியலுக்கு வர அவருக்கு தகுதி கிடையாது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது'' என்று கூறியிருந்தார்.இந்நிலையில், ரஜினி மீது அவதூறு பரப்பும் சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். கடந்த ஜூன் 19-ம் தேதி ரஜினியை அர்ஜூன் சம்பத் நேரில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், ''நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார் . அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டிய தருணம் இது'' என்று கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் ரஜினியை சந்திக்க உள்ளதாக அர்ஜூன் சம்பத் கூறி யுள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்