'காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம், பா.ஜ., கொண்டு வந்தது போல, 'ஸ்டிக்கர்' ஒட்டி விளம்பரம் தேடுவதாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டுபிடித்துள்ளார்.அவரது பேட்டி:இந்த ஆட்சி வேடிக்கையாகவும், காமெடியாகவும் தான் எல்லாராலும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் நிலவரங்களை பார்த்து, வெளிநாடுகளில் வாழ்பவர்கள் கூட கிண்டல் செய்கின்றனர். ஜி.எஸ்.டி., வரியை, பா.ஜ., கொண்டு வந்தது போல, மோடி விளம்பரம் தேடுகிறார்.காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. 18 சதவீதத்துக்கு மேல் வரி விதித்தால், மிகப்பெரிய ஆபத்தாகி விடும் என, ராகுல் ஏற்கனவே கூறினார்.காங்கிரஸ், ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது, மக்களின் சாதக, பாதகங்களை பார்க்கும். ஜி.எஸ்.டி., வரியால், பல அத்தியாவசிய பொருட்கள், ஏழை மக்களின் கைக்கு எட்டாத துாரத்துக்கு சென்று விடும். இனி, ஊழல் நடக்காது; அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என, கூற முடியுமா? காங்கிரஸ் திட்டங்களை எல்லாம், இவர்கள் கொண்டு வந்தது போல, 'ஸ்டிக்கர்' ஒட்டி விளம்பரம் தேடுகின்றனர். விளம்பரம் தேடுவது மட்டும், ஒரு அரசின் கடமை அல்ல; வேலை நடக்க வேண்டும்.சினிமாவுக்கு, 30 சதவீத வரி விதிக்கின்றனர். இதற்கு மேலும், தமிழக அரசு வரி விதிக்க உள்ளது. ஆனால், கேரளாவில் ஜி.எஸ்.டி., வரியை தவிர, வேறு வரி கிடையாது என, அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு அறிவிக்கவில்லை. சினிமா தொழிலுக்கான வரியை குறைக்காவிட்டால், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு குஷ்பு கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்