லக்னோ உ.பி., மாநிலத்தில், பா.ஜ., பிரமுகர்களுடன் வாக்குவாதம் செய்த பெண் போலீஸ் அதிகாரி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. புலனந்த்சார் மாவட்டம், சையானா நகரில் கடந்த ஜூன், 22ம் தேதி பெண் போலீஸ் அதிகாரி ஸ்ரீஸ்தா தாகூர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி, 200 ரூபாய் அபராதம் விதித்தார். அந்த நபர் தன்னை பா.ஜ., பிரமுகர் பிரமோத் குமார் என்றும், தன் மனைவி புலனந்த்சார் மாவட்டத்தில் பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார் என அறிமுகப்படுத்தி கொண்டார். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே பிரமோத் குமார், பிற பா.ஜ., பிரமுகர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். நகர பா.ஜ., தலை வர் முகேஷ் பரத்வாஜ் உள்ளிட்ட சில பா.ஜ., பிரமுகர்கள் அங்கு வந்து பெண் போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஐந்து பேரை ஸ்ரீஸ்தா தாகூர் கைது செய்து சிறைக்கு அனுப்பினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முகேஷ் பரத்வாஜ், 11 எம்.எல்.ஏ.,க்களுடன் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். பெண் போலீஸ் அதிகாரியின் செயலால் தங்கள் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வரிடம் புகார் கூறினார். இந்த சந்திப்பு நடந்த சில நாட்களில் பெண் போலீஸ் அதிகாரி ஸ்ரீஸ்தா தாகூர், பஹ்ரைச் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட் டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்